• Dec 27 2024

நடிகர் விஜய் ஆரம்பித்த கட்சியை கேலி செய்ததா ஜோகியின் படம்? கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வடிவேலு ,விகேக்கை தொடர்ந்து 90s கிட்ஸ் இன்  பேவரட் நகைச்சுவை நடிகர்களில் கவுண்டமணி, செந்தில் நிச்சயம் இருப்பார்கள். 

அதேபோன்றே தற்போதைய நகைச்சுவை நடிகர்கள் என்றால் யோகி பாபு கட்டாயம் இருப்பார். அப்படியான இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்க்கான 1  லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

2012 ஆம் ஆண்டு கார்த்தி நடித்து வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் "சகுனி" . இது முற்றிலும் அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படமாகும். 


குறித்த இந்த திரைப்படம் சராசரி வெற்றியை பெற்ற நிலையில், 12 வருடம் கழித்து குறித்த திரைப்படத்தின் இயக்குனர் சங்கர் தயாள் செந்தில்,யோகிபாபு மற்றும் பல முன்னணி நகைச்சுவை நடிகர்களை வைத்து  "குழந்தைகள் முன்னேற்ற கழகம்" என்ற திரைப்படத்தையும் இயக்குவதாக போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

அரசியல் நகைச்சுவை திரைப்படங்களை இயக்குவதில் இவர் பெயர் போனவர் என்பதனால் இவரது இந்த படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. 

அதே நேரத்தில் தளபதி விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற கட்ச்சியை ஆரம்பித்தது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயமே. இவ்வாறு இருக்கையில் விஜயின் கட்ச்சியை கேலி செய்யும் முகமாக "குழந்தைகள் முன்னேற்ற கழகம் " என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக  விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.


Advertisement

Advertisement