• Dec 26 2024

யாஷ் கூட நடிக்க இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்? ஷாக்கில் படக்குழுவினர்!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் டாப் நடிகைகள் ஒருவராக திகழ்பவர் தான் நயன்தாரா. இவர் திருமணம் முடித்த பின்பும் இளமை மாறாமல் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

தமிழில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர், மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழில் இவருக்கு அமோக வரவேற்பு காணப்படுகின்றது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களாக காணப்படும் விஜய், அஜித், ரஜினிகாந்த் என பிரபல நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நயன்தாரா. தற்போது தனக்கேற்ற வகையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது பிரபல நடிகர் யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்தில் நடிப்பதற்கு 20 கோடி ரூபா சம்பளமாக கேட்டுள்ளார் நயன்தாரா.


அதாவது, கே.ஜி எஃப் படத்தில் நடித்த பிரபல நடிகர் யாஷ்  பிரம்மாண்ட செலவில் தயாராகும் திரைப்படம் தான் 'டாக்சிக்'.  இந்த படத்தில் யாஷின் அக்காவாக நடிக்க இருபது கோடி ரூபாய் கேட்டுள்ளாராம்.


இதுவரை ஒரு படத்துக்கு 10 கோடி வரை சம்பளமாக பெற்று வந்த நயன்தாரா, தற்போது அதனை இரு மடங்காக சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

தற்போது அவருக்கு அந்த சம்பளத்தை கொடுக்கலாமா வேண்டாமா என பட குழுவினர் யோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement