• Dec 26 2024

நடிகை விசித்ரா இப்படியொரு கல்வி கற்று பட்டம் பெற்றிருக்கின்றாரா?- அடடே இதுவரை தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இரண்டு வீடுகளைக் கொண்ட இந்த 7வது சீசன் பிக்பாஸ் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெற்றிகரமாக அக்டோபர் 1ம் தேதி தொடங்கிவிட்டது. மொத்தம் 18 பேர் கொண்ட இந்த சீசனில் மக்களுக்கு அதிகம் பரீட்சயமான பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள தினேஷ், அர்ச்சனா இருவரால் நிகழ்ச்சி படு சூடாக ஒளிபரப்பாகி வருகிறது.மேலும் இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து கானா பாலா வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் இந்த சீசனில் வயதில் பெரியவராக இருந்தாலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் போட்டியாளராக இருப்பவர் தான் விசித்ரா. இவர் இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்தும் விளையாடி வருகின்றார்.

இந்த நிலையில் தான் நடிகை விசித்ராவின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் விசித்ரா அவர்கள் Psychologyல் Doctorate பட்டம் பெற்றுள்ளார். அவர் பட்டம் வாங்கும் போது எடுத்த வீடியோ வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement