• Jan 07 2025

மஞ்சரிக்காக சேனலுடன் சண்டை போட்டாரா விஜய் சேதுபதி.? எலிமினேஷனுக்கு முன் நடந்த சம்பவம்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் தான் மஞ்சரி. இவர் சிறந்த பேச்சாளராக திகழ்கிறார். 

எனினும் இறுதியாக நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் மஞ்ரியும் ராணாவும் எலிமினேட் ஆகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார்கள்.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மஞ்சரி வெளி ஏறுவதற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்கள் சில இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. 

அதன்படி தெரியவருகையில், மஞ்சரிக்கு பிஆர் டீம் இல்லை.. அவர் சிறந்த பேச்சாளராக காணப்படுகின்றார்.. அத்துடன் பிக்பாஸ் வைக்கும் டாஸ்க்குகளிலும் ஸ்ட்ராங்கான ஒரு போட்டியாளராக காணப்படுகின்றார்.. இந்த காரணங்களுக்காக இறுதியாக நடைபெற்ற எலிமினேஷனில் மஞ்சரியை காப்பாற்றுவதற்காக விஜய் சேதுபதி போராடியுள்ளார்.

ஆனாலும் சேனல் தரப்பில் எங்களுக்கு சிறந்த பேச்சாளர் வேண்டாம்.. சிறந்த நடிகர் தான் வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் மஞ்சரியை எலிமினேட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


ஏற்கனவே விஜய் சேதுபதி சேனலில் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டுக்கு ஏற்றார் போல தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வந்தது. மேலும் தான் சொல்வதை சேனல் தரப்பிலிருந்து கேட்பதில்லை என்று பிக் பாஸ் மேடையிலேயே அவர் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இன்னும் ஒரு சில வாரத்தில் முடிவடைய உள்ளது. 

இதில் டைட்டில் வின்னராக டிஆர்பி டீம் இல்லாத ஒருவராக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போட்டியாளராக உள்ள ஒருவரையும் தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement