விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இன்றைய நாள் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதியாக இடம் பெற்ற டிக்கெட் டூ பினாலே டாக்கில் ராயன் வெற்றி பெற்றார். மீதமுள்ள ஏழு போட்டியாளர்களுள் யார் யார் பைனலுக்குள் நுழைவார்கள் என்று ரசிகர்களும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே காணப்படும் நிலையில் எஞ்சியுள்ள போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த வார எலிமினேஷனில் ராணவ் வெளியேறி இருக்கிறார். அதனை அடுத்து இன்னுமொரு போட்டியாளர் வெளியேற வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் வெளியான ப்ரோமோவில் "வாரவாரம் யாரை அனுப்புனாலுமே ரொம்ப கஷ்டமா இருக்கும் இனிமே வெளிய அனுப்புறது எல்லாம் ரொம்ப கஷ்டம் அதுமட்டும் இல்லாமல் இன்னைக்கு ஒரு டுவிஸ்ட் இருக்கு. இனிமே யார் வந்தாலும் இது உங்க வெற்றி என்று நினைச்சுக்கோங்க" என்று இன்றைய நாள் எலிமினேஷன் யார் என்பதை காட்டுகிறார். அதோடு ப்ரோமோ முடிவடைகிறது
Listen News!