• Dec 27 2024

ராம்சரண் படத்தில் இருந்து விரட்டப்பட்ட விஜய் சேதுபதி! அதிக சம்பளம் கேட்டதே காரணம்! எவ்வளவு கேட்டார் தெரியுமா?

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

தமிழில் ரஜனிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருப்பது போன்று தெலுங்கு சூப்பர்ஸ்டார் ஆன சிரஞ்சீவியின் மகனே ராம்சரண் ஆவார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம்சரண் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக்கப்பட்டுள்ளார்.


சிறுத்தை என்ற திரைப்படத்தின் ஊடாக சினிமாத்துறைக்கு அறிமுகமாகியவர் ராம்சரண் ஆவார். முதல் படத்திலேயே வரவேடற்பு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து பல சினிமாக்களில் மாஸ் ஹீரோவாக நடித்து தெலுங்கில் பிரபலமாக உள்ள இவர் இந்திய அளவில் பேசப்பட்டது ராஜமௌலி இயக்கத்தில் NTR உடன் இணைந்து நடித்த RRR திரைப்படத்தின் மூலமே ஆகும்.


சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள இவரது அடுத்த திரைப்படதில் விஜய் சேதுபதியை வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக படக்குழுவினர் நாடியுள்ளனர். வில்லன் கதாபாத்திரத்தித்திற்கென்றே பெயர் போன விஜய் சேதுபதி குறித்த திரைப்படத்தில் நடிப்பதற்காக 20 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாகவும் இதன் காரணமா படக்குழுவினர் இவரை ரிஜெக்ட் செய்துள்ளதாகவும் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement