• Apr 15 2025

'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா? வெளியான அப்டேட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் பெரும் பட்டாளமே இணைந்து நடித்துள்ள 'கோட்' படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரெட்டை வேடத்தில் நடித்து வரும் விஜய், அண்மையில் கேரளாவில் தனது படப்பிடிப்புக்களை விறுவிறுப்பாக முடித்து இருந்தார்.

கேரளாவில் கோட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல இருப்பதாக பட குழுவினர் தெரிவித்து இருந்தனர். இதை தொடர்ந்து நேற்றைய தினம் துபாய்க்கு சென்று இருந்தார் தளபதி விஜய்.


இந்த நிலையில், கோட் படத்தின் அடுத்த படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் இந்த மாதம் நடைபெற்று முடிந்ததும், படத்தை ஏப்ரல் 14ம் திகதி வெளியிட திட்டம் இட்டுள்ளார்களாம். இதற்கான இறுதி அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement