• Oct 27 2024

அந்தகன் படத்தில் விஜய் பாடினாரா? சுடச் சுட வெளியான அறிவிப்பு

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அந்தாதுன் படத்தில் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்கின்றார். இந்த படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் வெளியாக உள்ளது.

பிரஷாந்த் நடிக்கும் அந்தகன் படம் தொடர்ந்தும் தாமதமாகி வரும் நிலையில், இந்த படம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு அந்தகன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், பிரஷாந்த், விஜய் மற்றும் பிரபுதேவா உடன் இருக்கும்  போட்டோவுடன் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த போஸ்டரை பார்த்ததும் விஜய் அந்தகன் படத்தில் பாடி இருக்கின்றாரா?  இல்லாவிடில் ஆடி இருக்கின்றாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றார்கள்.


ஆனாலும் உண்மையில் அந்தகன் படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிட மட்டும் தான் போகிறாராம். சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் தான் இந்த பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடல் பற்றிய அறிவிப்பு நாளை அதிகாரபூர்வமாக வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement