• Dec 26 2024

கப் ஜெயிக்க போனியா? இல்ல கல்யாணம் பண்ண போனியா? தர்ஷாவை வறுத்தெடுத்த பிரபலம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதல் முதலாக விஜய் சேதுபதி ஹோஸ்ட் ஆக களம் இறங்கி உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனாலும் இந்த சீசனை தன்னால் தொகுத்து வழங்க முடியாது என்றும் தனக்கு அதிக அளவில் பட சூட்டிங் இருப்பதாகவும் கூறி மறுத்திருந்தார். இதனால் அவருடைய இடத்திற்கு மக்கள் செல்வன் தெளிவானார்.

d_i_a

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

இதில் முதலாவதாக தயாரிப்பாளர் ரவீந்தர் எலிமினேட் ஆனார். இரண்டாவது ஆக சீரியல் நடிகர் அர்ணவ் வெளியேறினார். அதை  தொடர்ந்து இன்ஸ்டா  பிரபலமான தர்ஷா குப்தாவும் எலிமினேட் ஆகி இருந்தார். 


இறுதியாக நேற்றைய தினம் அன்ஷிதா எலிமினேட் ஆனதாக தகவல்கள் வெளியாகின. ஆனாலும் தீபாவளி போனஸ் ஆக  இந்த வாரம் யாரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியேறவில்லை.


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளராக கலந்து கொண்டு இறுதியாக வெளியேறிய தர்ஷா குப்தா Bigg Boss Fun Unlimited  நிகழ்ச்சியில் பங்கு பற்றியுள்ளார். இதன்போது பிக் பாஸ் பாலாஜி அவரை தாறுமாறாக  கேள்வி கேட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

அதன்படி அதில் பிக் பாஸ் வீட்டுக்குள்ள கப் ஜெயிக்க போனீங்களா? இல்ல கல்யாணம் பண்ண போனீங்களா என தர்ஷா குப்தாவிடம் செருப்படி கேள்வி கேட்டுள்ளார்.

Advertisement

Advertisement