• Dec 26 2024

பிரதீப் தப்பு மட்டும் கேட்டீங்க? வினுஷா கேட்ட செருப்படி கேள்வி! மிரண்டு போன பூர்ணிமா! வைரல் வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டில் தற்போது பழைய போட்டியாளர்கள் மீண்டும் என்ட்ரி  கொடுத்து மாஸ் காட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த  வினுஷா, முதலில் நிக்சன் தொடர்பில் அர்ச்சனாவிடம் சில கேள்விகளை  கேட்டு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பூர்ணிமாவிடமும் சில நியாயங்களை கேட்டு செருப்படி கொடுத்துள்ளார். தற்போது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதன்படி வினுஷா பேசுகையில், என்ன பத்தி நிக்சன் பேசிய விடயத்தில் உங்க பெயரும் பிக் பாஸ் போட்ட போர்ட்ல வந்துச்சு தானே. அப்போ உங்களுக்கு  கோவம் வர.. முடி எல்லாம் சிலுப்பி ஒரு மாதிரி பண்ணுனீங்க.. ஆனா  எனக்காக ஏன் குரல் கொடுக்கல என்பது போல பூர்ணிமாவிடம் வினுஷா கேட்டு இருந்தார்.


இதற்கு பதில் அளித்த பூர்ணிமா, இல்லங்க நான் கேட்காம இல்ல.. எனக்கு அந்த டைம்ல அந்த விஷயம் தப்பா  தோணல.. அது ஒரு வேர்டு தானே.. அது எனக்கு தப்பா தெரியல.. மத்தபடி நிக்ஸனிடம் நானும் கேள்வி கேட்டேன். தனிப்பட்ட ரீதியா அவன்கிட்ட நிறைய கேள்வி கேட்டன். வேணும் என்றால் நிக்சன் உள்ளே வரும்போது கேளுங்க என பூர்ணிமா சொல்கிறார்.

அதற்கு வினுஷா, இல்ல நான் எல்லா பிக் பாஸ் வீடியோவும் பாத்துக்கிட்டு தான் இருந்தன். நீங்க நிக்சன் கிட்ட பேசவே இல்ல. இந்த சம்பவம் நடந்த அந்த நைட்டு கூட நீங்க அவன் பண்ணா பேசினது போல தான் அவனுக்கு சப்போர்ட் பண்ணீங்க என சொல்ல பூர்ணிமா ஷாக் ஆகிறார். 


மேலும், எல்லா விஷயத்தையும் பத்தி பேசுற நீங்க, இதுல ஏன் பேசல? என பூர்ணிமாவிடம் கேள்வி கேட்க பூர்ணிமா என்ன சொல்லுவது என புரியாமல் முழித்துக் கொண்டு காணப்படுகிறார்.


அதாவது, பிக் பாஸ் வீட்டில் வினுஷா இருக்கும்போது  நிக்சன் அவரை உருவாக்கேலி செய்திருந்தார். அந்த நேரத்தில், ஜோவிகா இதை ரெண்டு பேருமே ஜாலியா எடுத்தா எந்த பிரச்சனையும் வராது, வேற மாதிரி எடுத்தா பிரச்சனை வரும் என என்பது போல சொல்ல. இடையில் பேசிய பூர்ணிமா இல்லை அது அவன் ஜாலியா தான் சொல்லிருப்பான் என அவருக்கு சப்போர்ட் பண்ணி இருப்பார்.

இதன் அடிப்படையிலேயே, தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வினுஷா அதற்கான நியாயத்தைக் கேட்டுள்ளார்.


Advertisement

Advertisement