• Dec 26 2024

தினேஷிடம் தொடரும் வன்மம்! அசிங்கபடுத்தப்பட்ட விசித்ரா? நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து சென்ற பரிதாபம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது கோலாகலமாக  பல திருப்பங்களோடு  முடிவடைந்தது . 

இந் நிலையில் பிக் பாஸ் சீசன் 7ல்  வீட்டுக்குள்ள இருக்கும் போதே பல சண்டைகள் மூலம் குழுவாக பிரிந்தனர் . அந்த பகை வெளியே போன உடனே இல்லாமல் போய் நண்பர்களாக ஆகுவது தான் இதுவரை நடந்த எல்லா சீசன்களிலும் நடந்தது . 

ஆனால் இந்த சீசனில் மட்டும் வழமைக்கு மாறாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியும் அந்த பகை , கோவம் எல்லாம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்று உறுதிப்படுத்திவிட்டார்கள் . 


விஜய் டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிக் பாஸ் போட்டியாளர்களான தினேஷ் , விஷ்ணு , ரவீனா மற்றும் விசித்திரா கலந்து கொண்டனர் . மகாபா தொகுத்து வழங்கிய இந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் தினேஷ் அவர்கள் நிகழ்ச்சியின் போது  விசித்திராவை எல்லா விதத்திலும் அவமானப்படுத்தியதால் மிகவும் கோவம் அடைந்த விசித்திரா நிகழ்ச்சியின் பாதியிலேயே எழும்பி சென்றுள்ளார் . 

அதனால் இன்னும் இவர்களுடைய பகை தொடர்கிறதா என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் . 


இந் நிலையில் மாயா மாஜிக் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது மாயா பெஸ்ட் நல்ல ஒரு என்டர்டைன்னேர் என்று சொல்லி வரும் ஒரு சிலருக்கு அர்ச்சனா ரசிகர்கள் கடுமையாக திட்டி வருகின்றனர் . 

மாயா ஒரு சூனியகாரி என்றும் மாயா இந்த விளையாட்டுக்கு தகுதியே இல்லாத ஒருத்தர் விஜய் டிவியும் , கமல் மூலம் தான் இவ்வளவு நாட்கள் உள்ள இருந்தார் என்றும் ஒரு சிலர் சமூகவலைத்தளங்களில் கடுமையாக மாயாவை திட்டி வருகின்றனர். இன்னும் பிக் பாஸ் பகைகள் தொடர்ந்து வருகின்றன .

Advertisement

Advertisement