விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
மேலும், நேற்றைய தினம் அடுத்த வாரத்திற்கான ஹாப்டன்சி யார் என்பது தொடர்பில் டாஸ்க் வைக்கப்பட்டு அதில் தினேஷ் வெற்றி பெற்றார்.இதுவே அவருக்கு கிடைத்த பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்,பிக் பாஸ் வீட்டிலுள்ள பிரோவோக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெறுள்ளது. அதன்படி, பிரோவோக்கு கேக் வெட்டி அனைவரும் அவரது பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர்.
Happy Birthday #Bravo 🎂#BiggBoss7Tamil #BiggBossTamilSeason7#BiggbossTamil7 #biggbosstamilpic.twitter.com/j9M1rwmM76
— BBTamilVideos (@BBTamilVideos) November 12, 2023
Listen News!