• Dec 26 2024

விஜய் கட்சியில் சேர தயார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர்பதவி வழங்கினால் மகிழ்ச்சி: அமீர்

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் அமீர், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அதே நேரத்தில் விஜய் அழைத்தால் அவரது கட்சியில் சேர தயார் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் அமீர் அவ்வப்போது பரபரப்பான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருவார் என்பதும் குறிப்பாக நாம் தமிழர் கட்சிக்கு அவர் தனது முழு ஆதரவை வழங்கி வருவார் என்பது தெரிந்தது. ஆனால் அதே நேரத்தில் அவர் திமுகவின் ஆதரவாளராக இருந்து வருகிறார் என்பதும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவ்வப்போது சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் சட்டவிரோதமான பொருட்களை கடத்திய வழக்கில் அமீர் நெருங்கிய நண்பர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடமும் அமலாக்கத்துறை விசாரணை செய்துள்ளது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் அழைத்தால் அவரது கட்சியில் சேர தயாராக இருக்கிறேன் என்றும் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்..

ஆனால் அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கினால் எனக்கு மகிழ்ச்சி என்றும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது சரியாகத்தான் இருக்கிறது என்றும் அமீர் தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு கட்சிக்கு ஆதரவு, திமுகவை எதிர்க்கும் விஜய் கட்சிக்கும் ஆதரவு என இரட்டை நிலைப்பாடுகளில் அமீர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement