• Apr 16 2026

பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த இயக்குநர்..! இணையத்தில் வைரல் புகைப்படம்

Aathira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் 'இயக்குநர் இமயம்' என்று போற்றப்படும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, தனது தனித்துவமான இயக்கத்தால் தமிழ் திரையுலகில் தனி இடம் பிடித்தவர். ஆனால் தற்போது அவருடைய உடல்நலக்குறைவு ரசிகர்கள் மத்தியில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். நுரையீரல் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவ குழுவின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றார். பல முக்கியப் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.


மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் வெளியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பார்ப்போரை கலங்க வைத்தது. அதில் அவர் மிகவும் உடல் மெலிந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளித்தார். அதன்பின் அவர் தொடர் சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு நிம்மதி கொடுத்தது.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிப்படைந்து ஓய்வில் இருக்கும் பாரதிராஜாவை இயக்குநர் பேரரசு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இதன்போது இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. 

இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாரதிராஜாவின் ஆரோக்கியம் மேம்படவேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement