• Dec 26 2024

இயக்குநர் பா. ரஞ்சித்தின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?- ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் பா.ரஞ்சித்.வித்தியாசமான கதையம்சத்தால் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த பா.இரஞ்சித், அடுத்ததாக மெட்ராஸ் என்கிற தரமான படத்தை கொடுத்து தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர் என்கிற அந்தஸ்தை பெற்றார்.

தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி காலா போன்ற திரைப்படங்களையும் இயக்கியிருந்தார்.தொடர்ந்து ஆர்யாவை வைத்து இயக்கியிருந்த சர்பாட்டா பரம்பரை திரைப்படம் மாஸ்டர் பீஸ் வெற்றியை பா. ரஞ்சித்திற்கு கொடுத்திருந்தது.


தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது.சீயான் விக்ரம் நாயகனாக நடித்துள்ள இப்படம் கே.ஜி.எப்-ஐ மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. இப்படம் வருகிற ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது.


இந்த நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி  பா.இரஞ்சித்தின் சொத்து மதிப்பு ரூ.43 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.10 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement