மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், பிரபல திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு உரையாற்றியுள்ள தகவல் தற்பொழுது வைரலாகி வருகின்றது. அவர் தனது உரையில், சமூக மேம்பாடு மற்றும் மக்களுக்கான விடுதலைக்கு தலைவர்கள் செய்ய வேண்டிய பங்களிப்புக் குறித்துப் பல முக்கியமான கருத்துகளைக் கூறியுள்ளார்.
வெற்றிமாறன் அதில் கூறியதாவது,"தலைவர்கள் என்பவர்கள் மக்களோடு மக்களாக நின்று மக்களின் பிரச்சனைகளுக்கு நேரடியாக சண்டை போட்டு அந்த மக்களுக்கான விடுதலையை வென்றெடுத்துக் கொடுப்பவர்கள். நம்முடைய புரிதலுக்கு அந்த வகையான தலைவர்கள் பெரும்பாலும் தெரியாமல் உள்ளனர்." எனக் கூறியுள்ளார்.
மேலும் தனது வாழ்க்கைப் பயணத்தை பற்றியும் வெற்றிமாறன் பகிர்ந்து கொண்டார். "விடுதலைக்குப் பிறகு, நான் ஒரு சினிமா மாணவனாக இருந்தேன். இப்போது, நான் ஒரு மார்க்சிஸ்ட் மாணவனாகவும் இருக்கின்றேன்." எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறனின் உரை, மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் மிகவும் ஈர்த்தது. சமூக நீதிக்காக தனது குரலை உயர்த்தும் வெற்றிமாறனை திரைப்படங்கள் வழியாகவே மக்கள் அறிந்தனர். தற்பொழுது அரசியல் மற்றும் சமூக கருத்துக்களையும் தன்னுடைய உரைகளில் வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பதனை பலரும் பாராட்டுகின்றனர். மதுரையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் மூலம், இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய சமூகவாதப் பார்வையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
Listen News!