• Jul 21 2025

சினிமாவிற்கும் சென்டிமென்டிற்கும் சம்மதம் இல்லை..! இயக்குநர் விக்ரமனின் பதிவு...!

Roshika / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரமன். 'புது வசந்தம்' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், தனித்துவமான கதைகளும் உணர்வுமிக்க வசனங்களும் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது இவர் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 


விக்ரமன் தனது முதல் படமான புது வசந்தம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். “அந்தப் படத்தில் என் முதல் ஷூட் டைலாகே ‘உன்னை எல்லாம் செருப்பால அடிக்கணும்டா’ என்பதுதான்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த வசனம் குறித்து நடிகர் விணுசக்கரவர்த்தி ஏதும் ஒரு ‘சென்டிமென்ட் டயலாக்’ வைத்திருக்கலாமே எனக்கேட்டாராம். ஆனால் இயக்குநர் விக்ரமன் அதற்கு மறுத்துவிட்டாராம் என தெரிவித்தார்.  மேலும் கூறும் போது சினிமாவிற்கும் சென்டிமென்டிற்கும்  சம்மதம் இல்ல,” என்று அவர் கூறியதாக நினைவுகூறினார். இயக்குநர் விக்ரமனின் நேர்த்தியான கதைத்திறமை மற்றும் உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள் அவரது படங்களை தனிப்பட்ட அனுபவமாக மாற்றுகின்றன.

Advertisement

Advertisement