• Dec 27 2024

பிரேம்ஜி ஜாதகத்தில் சொன்னது போல நடக்குதே..! இப்படியொரு விஷயமும் இருக்கா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரை உலகில் சிங்கிளாக காணப்பட்ட பிரேம்ஜிக்கு நேற்றைய தினம் மிக எளிமையாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இதில் அவரது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

பிரேம்ஜி திருமணம் செய்த பெண் வங்கியில் வேலை செய்வதாகவும் முதன்முதலாக அவர்தான் பிரேம்ஜிக்கு தனது காதலை சொல்லி, அதற்கு பின்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், பிரேம்ஜி தனது திருமணம் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி உள்ளது.


அதில், எனக்கு எனது அம்மா சொன்ன ஒரே விஷயம்.. எனக்கு ஜாதகம் பார்த்தாங்களாம். அதுல என்ன சொல்லி இருக்கு என்றால், எனது மனைவி வந்து என்னிடம், எங்க கொடியில் காயும் புடவை கொண்டு வாருங்கள் என்று சொன்னால், நான் அந்தப் புடவையை எடுத்து சலவை செய்து மடித்துக் கொண்டு வந்து கொடுப்பேன். அப்படி எனது மனைவி ஒன்று சொன்னால் நான் பத்து செய்வேனாம். மனைவியை அப்படி பாத்துக்குவேனாம் என்றார்.

இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாக உள்ளது. அத்துடன் திருத்தணி கோயிலில் சிம்பிளாக நடந்த இவர்களின்திருமணத்தின் போது, பிரேம்ஜி தனது மனைவியை தாலி கட்டியதும் மகிழ்ச்சியில் கன்னத்தில் முத்தமிட்டதும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. இவ்வாறு ஜாதகத்தில் என்ன இருக்கிறதோ அது நடக்க ஆரம்பிச்சுட்டோ  என்று கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்

Advertisement

Advertisement