• Dec 26 2024

ஆர்யாவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா... தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  2005ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. பல படங்களில் நடித்து இருந்த இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா வாங்க தெரிஞ்சிக்கலாம். 


நடிகர் ஆர்யாவின் சினிமா பயணம் உள்ளம் கேட்குமே, கலாபக் காதலன், பட்டியல், ஓரம் போ, நான் கடவுள், அவன் இவன், மதராசப்பட்டினம், சார்பட்டா பரம்பரை, டெடி என நிறைய வித்தியாசமான படங்களாக அமைந்தது.


அடுத்து சார்பட்டா பரம்பரை 2ம் பாகம், மிஸ்டர் எக்ஸ், சைந்தவ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். படங்களில் நடிப்பதை தாண்டி தயாரிப்பு நிறுவனம், சொந்த உணவகம் என தொழில்களையும் கவனித்து வருகிறார்.


ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு ரூ. 80 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ள நடிகர் ஆர்யாவிற்கு கடந்த 2019ம் ஆண்டு நடிகை சயீஷாவுடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு ஆரியானா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.

Advertisement

Advertisement