• Dec 25 2024

ரஜினி பிறந்தநாளில் வெளியானது லால் சலாம் டிரைலர்... திருவண்ணாமலையில் மனமுருகி வேண்டிய மகள் ஐஸ்வர்யா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

அன்றும் சரி இன்றும் சரி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தனது 73 ஆவது பிறந்தநாளை நேற்றைய தினம் வெகுவிமர்சையாக கொண்டாடினார். அது மட்டுமில்லாமல்  அவரது ரசிகர்கள் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கியும் ஆலயங்களில் வழிபாடு செய்தும்  கொண்டாடி மகிழ்ந்தனர். 


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடனுய மகள்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ,தனுஷ் நடித்த ‘3', கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ போன்ற படங்களுக்குப் பிறகு தான் இயக்கம் ‘லால் சலாம்' படத்தில் தனது அப்பாவை அதாவது  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைத்துள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளான நேற்று ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்' படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியானது. இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு ஐஸ்வர்யா மனமுருகி  சாமி  தரிசனம் செய்கின்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement