• Dec 26 2024

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? மிரள வைக்கும் பேங்க் பேலன்ஸ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிறைய சர்ச்சைகளைத் தாண்டி, அதன் டைட்டில் வின்னராக விஜே அர்ச்சனா வெற்றி பெற்றார்.

இதை தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 7  டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பணம் ரொக்கமாக கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், விஜே அர்ச்சனாவின் சொத்து மதிப்பு பற்றிய விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அது தொடர்பில் விரிவாக பார்க்கலாம்.


இறுதியாக இடம்பெற்ற பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றவர் தான் அர்ச்சனா. இவர், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பின் மொத்த ஆட்டமும் மாறியது.

பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற ஆரம்பத்தில் தான் வெளியே போக வேண்டும் என்று அழுது புலம்பினாலும், நாளடைவில் டைட்டிலை வின் பண்ண வேண்டும் என்ற நோக்கில் சக போட்டியாளர்களுடன் மோதி வந்தார்.


இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 70 நாட்களைக் கடந்த அர்ச்சனாவுக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இவ்வாறான நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்த அர்ச்சனாவுக்கு ஒரு நாளைக்கு 25 ரூபா சம்பளமாக பேசப்பட்டுள்ளது.


அதன்படி அர்ச்சனாவின் சொத்துக்களை கணித்து பார்த்தால், டைட்டில் வின் பண்ணியதற்கு 50 லட்சம், பிக் பாஸ் வீட்டில் இருந்தமைக்கான சம்பளம் 17.5 லட்சம், மேலும் அர்ச்சனாவுக்கு கார் ஒன்றும் பரிசாக கிடைத்ததாக கூறப்படுகின்றது.

ஆகமொத்தத்தில் விஜே அர்ச்சனாவின் சொத்து மதிப்பு ஒன்று அரைக் கோடிக்கு மேல் இருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement