• May 28 2026

பாக்ஸ் ஆபீஸில் ரன்வீர் சிங்கின் ருத்ரதாண்டவம்! 'துரந்தர் 2' படத்தின் இத்தனை நாள் வசூல்

shali / 2 months ago

Advertisement

Listen News!

ரன்வீர் சிங்- ஆதித்யா தார் கூட்டணியில் உருவான ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவானது. அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில், இப்படம் கடந்த மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது.


வெளியான முதல் நாளிலிருந்தே இப்படம் வசூலில் அதிரடியை காட்டி வந்தது. ஆக்ஷன், எமோஷன் மற்றும் மாஸ் அம்சங்கள் இணைந்த இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ரன்வீர் சிங்கின் ஆற்றல்மிக்க நடிப்பு மற்றும் ஆதித்யா தாரின் இயக்கம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய வசூல் சாதனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் உலகளவில் ரூ.1088 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ரூ.1000 கோடி கிளப்பில் மிகவும் வேகமாக இணைந்த இந்திய திரைப்படமாகவும் இந்த படம் புதிய வரலாறு படைத்துள்ளது.

இந்த சாதனை, படக்குழுவினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் பெருமையை அளித்துள்ளது. மேலும், பாலிவுட் திரையுலகில் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு மீண்டும் ஒரு புதிய உயிர் கொடுத்த படமாக ‘துரந்தர் 2’ பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இப்படம் வசூலில் புதிய சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement