• Apr 12 2025

சித்தார்த் - அதிதி ராவ் ஜோடிக்கு இப்படியொரு வாழ்த்து சொன்னாரா நயன்தாரா? வைரல் போஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ்வும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில்,  இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று தீயாய் பரவி வந்தது.

இது தொடர்பில் திருமண புகைப்படங்கள் ஒன்றையும் வெளியிடாமல் அமைதி காத்து வந்த சித்தார்த் ஜோடி, இதை உறுதி செய்யும் வகையில் நேற்றைய தினம் தமது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்து இருந்தார்கள். இதற்கு பலரும் தமது வாழ்த்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.

இதை தொடர்ந்து அதிதி ராவின் முதல் கணவர் குறித்தும், சித்தார்த்தின் முதல் மனைவி குறித்தும் தகவல்கள் வெளியாகி இருந்தன.


இந்த நிலையில், சித்தார்த் - அதிதி ராவ் ஜோடிக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார் நடிகை நயன்தாரா.

அதன்படி,  தனது இன்ஸ்டாவில் பக்கத்தில் ' சித்தார்த் – அதிதி ராவ் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்' என்று பதிவு ஒன்றினை வெளியிட்டு அவர்களை வாழ்த்தி உள்ளார். 


Advertisement

Advertisement