• Apr 18 2026

கிழக்கு வாசல் சீரியலில் இனி அர்ஜுன் கேரக்டரில் நடிக்கவுள்ள நடிகர் யார் தெரியுமா? வெளியான புது அப்டேட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்நுழைந்தவர் தான் தினேஷ். இவருக்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு காரணம், அவர் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடுவதோடு நீதி, நேர்மை ,நியாயம் என தனிப்பாதையில் செல்வதால் தான்.

இவ்வாறு நடிகர் தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு விஜய் டிவி, ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில், கிழக்கு வாசல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த தினேஷ், பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததால் திடீரென விலகியதால் தற்போது அவருக்கு  பதிலாக நடிக்கபோகும் நடிகர் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.


அதன்படி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தான் நடித்து வந்த கிழக்கு வாசல் சீரியலில் இருந்து பாதியிலேயே விலகிய தினேஷ்க்கு பதிலாக யார் புதிதாக நடிக்கபோகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. 

இவ்வாறான நிலையில், தினேஷுக்கு பதிலாக யார் நடிக்கவுள்ளார் என்பதை என்பதை விஜய் டிவியே அறிவித்துவிட்டது. அதன்படி தினேஷ் நடித்த அர்ஜுன் கேரக்டரில் அவருக்கு பதிலாக சசிந்தர் நடிக்க உள்ளாராம் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement