• Sep 17 2026

விஜய்யைத் தொடர்ந்து அரசியலில் களமிறங்கும் கார்த்தி.. பின்னணி என்ன தெரியுமா.?

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் சுந்தர்.சி, சமீபத்திய பட விழா ஒன்றில் பேசிய சுவாரஸ்யமான கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை நினைவுகூர்ந்தது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.


இதுகுறித்து பேசிய சுந்தர்.சி, பல வருடங்களுக்கு முன்பு ‘மெர்சல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதாகவும், அப்போது நிகழ்ச்சியில் அமர்ந்திருந்த விஜய்யின் ரசிகர்களை பார்த்து, “இங்கே பல வருங்கால எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் அமர்ந்துள்ளனர்” என தான் கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால், அந்த வார்த்தைகள் இவ்வளவு விரைவில் நிஜமாகும் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நடிகர் கார்த்தியை அரசியலுக்குள் தான் இழுக்கவில்லை என்றும் சுந்தர்.சி தெளிவுபடுத்தியுள்ளார். விஜய் மற்றும் ரஜினிகாந்துக்கு அடுத்ததாக, அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் மாஸ் என்டர்டெய்னர் கார்த்தி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கார்த்தியுடன் இணைந்து தான் இயக்கவுள்ள திரைப்படம் குறித்தும் அவர் பேசியுள்ளார். 80-களில் வெளியான படங்களைப் போல பல நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிக்கும் முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக இப்படம் உருவாகும் என்றும், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். சுந்தர்.சியின் இந்த கருத்துக்கள் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

Advertisement

Advertisement