• Dec 25 2024

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சீரியல் நடிகை சீமாவின் நிலை என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் நடித்து பிரபல்யமானவர் தான் சீமா. இவர் குறித்து தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கலக்கியவர் தான் இவர். கேரளாவைச் சேர்ந்த இவர் சென்னையில் தான் வசித்து வந்தார். இவருடைய தந்தை சென்னையில் தான் டிவிஎஸ் என்னும் பார்சல் சேவிஸில் பணிபுரிந்திருக்கின்றார். மேலும் இவருடைய 7 வயதிலேயே அவரது அப்பா பிரிந்து வேறு திருமணம் செய்து விட்டதால் தன்னுடைய அம்மாவுடன் தான் வசித்து வந்தார்.


சிறுவயதில் இருந்து நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் நடனமாடி பழகினார். அதன் பின்னர் நிலவே நீ சாட்சி என்னும் படத்தில் நடனமாடி தமிழ் சினிமாவில் நுழைந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்துள்ளன். சீமாவின் நெருங்கிய நண்பர் தான் கமல்ஹாசனாம்.

இவர் தான் சீமாவுக்கு நடனத்தையும் கற்றுக் கொடுத்தாராம். இதன் பின்னர் தன்னுடைய 19 வயதில் மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார். தொடர்ந்து தமிழிலும் நடிக்க ஆரம்பித்த இவர் பகல் நிலவு, கைவரிசை , மலைச்சாரல், பகவதி போன்ற படங்களிலும் நடித்திருக்கின்றாராம்.


இதுவரை 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் மலையாளம் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு மொழியிலும் நடித்திருக்கின்றாராம். வெள்ளித்திரையில் வாய்ப்புக் குறைந்தவுடன் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.அதன் படி சின்னத்திரையில் வம்சம், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், செம்பருத்தி எனப் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.

இதற்கிடையில் இவர் இயக்குநர் சசி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். இவ்வாறு இவர் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது இவருடைய கணவர் இறப்புக்குள்ளானார். இதனால் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.


இவர் அண்மையில் அளித்திருந்த பேட்டியில் கூட எனக்கு சினிமா பற்றி சொல்லித் தந்தது என்னுடைய கணவர் தான் அவரே இப்போ என்னை விட்டுப் போனது என்னால் தாங்க முடியவில்லை. இப்போ அதிலிருந்து மீண்டு வருகின்றேன். மீண்டும் நடிக்க ஆரம்பிப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement