• Dec 26 2024

புதிய சொகுசு கார் வாங்கிய நடிகர் விஜய்... என்ன விலை தெரியுமா?

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் "Greatest Of All Time" எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஜூன் 22ஆம் தேதி Greatest Of All Time படத்தை வெளியிட்ட படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

நடிகர் விஜய்யிடம் விலைஉயர்ந்த Rolls Royce கார் இருக்கிறது என்று நாம் அனைவரும் அறிவோம். இதன் விலை ரூ. 4.63 கோடி முதல் ரூ. 5.28 கோடி வரை இருக்கும் என தகவல் தெரியவந்துள்ளது.இந்நிலையில், Rolls Royce கார் ஒரு பக்கம் இருக்க BMW i7 xDrive 60 என்கிற புதிய சொகுசு கார் ஒன்றை நடிகர் விஜய் வாங்கியுள்ளாராம்.


எலக்ட்ரிக் வகையில் உருவாகியுள்ள இந்த காரின் விலை ரூ. ரூ. 2.30 கோடி முதல் ரூ. 2.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கூடிய விரைவில் அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். 

Advertisement

Advertisement