மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்து வந்த நடிகை அனிகா, அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து அஜித் நடித்த விசுவாசம், விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான், ஜெயம் ரவி நடித்த மிருதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த பிடி சார் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை அனிகா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், மும்பையில் ஒரு செருப்பை பார்த்ததாகவும் அது தன்னை கவர்ந்ததாகவும் சொன்னார். அந்த செருப்பின் மீது தீராத ஆசை இருந்ததாகவும் அதை வாங்க வேண்டும் என்றும் அதுக்காக ஒரு லட்சம் ரூபா செலவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதனை கேட்ட ரசிகர்கள் ஒரு லட்சத்துக்கு செருப்பா? என வியந்து கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.
Listen News!