• Jan 14 2025

மாமியாருக்கு உதட்டு முத்தமா? மருமகன் செய்ற காரியமா இது? கிழித்து தொங்க விட்ட நெட்டிசன்கள்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிரபலமான ரோபோ சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

குறிப்பாக வாயை மூடி பேசவும், விஸ்வாசம், மாரி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.

ஆனாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட மஞ்சள் காமாலை நோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், அதற்காக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இதன் பொருட்டு திடீரென உடல்  குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.

ஆனாலும் பல மாதங்களாக அவர் மேற்கொண்ட தொடர் சிகிச்சை மற்றும்  தனது விடாமுயற்சியினாலும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளார்  ரோபோ சங்கர்.


இவருடைய மகள் இந்திரஜா 'பிகில்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகினார். பாண்டியம்மா என்ற கேரக்டரில் அவர் நடித்து  அசத்தியிருப்பார். தற்போது இவருக்கும்  அவரது முறை மாமனான கார்த்திக் என்பவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து சென்னையில் இவர்களது திருமண வரவேற்பும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விலை உயர்ந்த கிப்ட்களையும் கொடுத்து இருந்தனர்.


இந்த நிலையில், தனது திருமண வரவேற்பு விழாவில் மணமகனான கார்த்திக் செய்த செயல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவுக்கு மருமகனான கார்த்திக்  உதட்டு  முத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி உள்ளன.

எனவே மாமியாருக்கு மருமகன் எப்படி உதட்டு முத்தம் குடுக்கலாம் என தற்போது சர்ச்சை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement