• Dec 26 2024

நயன்தாரா பிறந்தநாளில் விக்னேஷ் சிவன் கொடுத்த சூப்பர் கிப்ட் என்ன தெரியுமா?- அதன் விலை மட்டும் இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நானும் ரௌடி தான். இப்படத்தில் பணியாற்றிய போது தான் நயன்தாரா விக்னேஷ் சிவனைக் காதலிக்க ஆரம்பித்ததோடு பல வருடங்கள் கடந்து கடந்த வருடம் இருவரும் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த நயன்தாரா,  தற்போது தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


இது தவிர கெரியரிலும் நயன்தாரா கவனம் செலுத்தி வருகின்றார். அதன்படி இவர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இவர் நடித்துள்ள அன்னபூரணி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாள் நவம்பர் 18-ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், கணவர் விக்னேஷ் சிவன் தனக்கு காஸ்டலி கார் ஒன்றை பரிசாக அளித்ததாக தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். மெர்சிடிஸ் மேபேக் நிறுவனத்தின், இந்த கார் சுமார் 2.69 கோடி முதல் 3.40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement