• Oct 26 2024

தலைவர் படத்தை பார்த்த தளபதியின் மிரட்டல் ரியாக்ஷன் என்ன தெரியுமா? ட்விட் இதோ..

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் இன்றைய தினம் வெளியான நிலையில் சமூக வலைத்தள பக்கங்களில் இதைப்பற்றிய விமர்சங்கள் தான் பேசப்பட்டு வருகின்றது.

வேட்டையன் படத்தை பார்ப்பதற்காக பல பிரபலங்களும் படை எடுத்து சென்றிருந்தார்கள். அதேபோல இளைய தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் வேட்டையன் படத்தை பார்த்துவிட்டு விஜயின் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த்தை பல வழிகளிலும் ட்ரோல் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன், தற்போது இந்த விஷயத்தையும் கையில் எடுத்துள்ளார்.

மேலும், வேட்டையன் படத்தை பட குழுவினர் மற்றும் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் திரையரங்குக்கு சென்று நேரிலேயே பார்த்து இருந்தார்கள். நடிகர் விஜய்யும் தேவி தியேட்டரில் முதல் நாள் ஷோவாக வேட்டையன் படத்தை பார்த்துள்ளார்.


இந்த விஷயத்தை வைத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். அதன்படி வேட்டையன் படத்தை பார்த்த விஜய் அப்பாடா என பெருமூச்சு விடுவது போல வடிவேலுவின் காமெடியை வைத்து ரியாக்ஷனை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் கோட் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்ற போதும் விமர்சன ரீதியாக அடிவாங்கியிருந்தது. இதன் காரணத்தினால் ப்ளூ சட்டை மாறன் இப்படி விமர்சனம் செய்துள்ளார். தற்போது அவருடைய பதிவுக்கு பலர் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

Advertisement