• Dec 26 2024

நடிகர் சூர்யாவின் கோடி கணக்கு சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா?

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கவுள்ள இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் சூர்யா. இவர் இயக்குநர் சிவா இயக்கத்தில் கங்குவா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதத்துடன் இப்படத்தின் ஷுட்டிங் முடிவடையப் போவதாக் கூறப்பட்டது.


இந்நிலையில் 2024ல் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 250 கோடி இருக்குமாம். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 20 முதல் ரூ. 25 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் சூர்யா மும்பையில் தற்போது வாங்கியுள்ள புதிய வீட்டின் மதிப்பு ரூ. 70 கோடி என கூறப்படுகிறது. BMW 7 Series - ரூ. 1.38 கோடி, Audi Q7 - ரூ. 80 லட்சம், Mercedes-Benz M-Class - ரூ. 60 லட்சம் போன்ற விலைஉயர்ந்த சொகுசு கார்களை பயன்படுத்தி வருகிறார். 

Advertisement

Advertisement