• Dec 26 2024

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் தனது ரசிகர்களுக்கு கால் செய்து விசாரித்த நடிகர் சூர்யா... என்ன சொன்னார் தெரியுமா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் மிக்சாங் சூறாவளி மற்றும் கனமழையால் அநேகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மக்கள் மட்டுமன்றி கால்நடைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீயணைப்பு குழுவினர் , மற்றும் மக்கள் பலர் இணைந்து உதவி செய்து அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

தற்போது மக்களுக்கான நிவாரண பொருட்கள்  அநேகமான பகுதிகளில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் இயக்கம் சார்பாக பல பகுதிகளிலும் நிவாரண பொருட்கள், உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. 


நடிகர் சூரிய ரசிகர்கள் இணைந்து பெரம்பூர் ,வியாசர்பாடி ,கொளத்தூர் ,டிவிகேநகர் மற்றும் மாதவரம் ஆகிய   பகுதிகளில் மைச்சாங் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்கின்றனர்.


இவ்வாறு வெள்ளநீரில் இரவு பகல் பார்க்காது உணவு வழங்கி வரும் தனது ரசிகர்கள் மீது அக்கறை கொண்டு நடிகர் சூர்யா அவர்கள் கால் செய்து " பசங்க எல்லாரும் தன்னிலையே நிண்டுட்டு இருக்காங்க நயிட் காலுக்கு தேங்கா எண்ணெய் மஞ்சள் பொடி போட்டு சுத்தம்படுத்திக்க சொல்லுங்க என்று கூறியுள்ளார். இந்த ஓடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Advertisement

Advertisement