• Dec 25 2024

ஏன்டா ஆடுறா? சினிமான்னா என்னான்னு தெரியுமா? ஓபன் டாக் கொடுத்த சுந்தர்.சி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் காணப்படும் சுந்தர்.சி இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் அரண்மனை 4. இந்த திரைப்படத்தில் ஜோகி பாபு, ராசி கண்ணா, தமன்னா, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் வசூலில் சுமார் 100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்திருந்தது.

இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சுந்தர்.சி, ஒரு படம் எடுத்துவிட்டு சினிமான்னா என்னான்னு தெரியுமா என்று கேட்கிறார்கள்.அவர்களை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

பாரதிராஜா, பாலச்சந்திரன் ஆகியோர் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சாதனை படைத்திருக்கின்றார்கள். அப்படிப்பட்ட படத்தை எடுத்தவர்களே அமைதியாக இருக்கும்போது, நீ எல்லாம் ஏன்டா ஆடுறா? என்று தான் சொல்லத் தோன்றுகிறது. நானே இதுவரை பேட்டிகள் அவ்வளவாக கொடுத்திருக்க மாட்டேன். அந்த நேரத்தில் படத்தைப் பற்றி அல்லது காட்சியை பற்றி யோசிக்கலாம் என்று நினைப்பேன்.


ஆனாலும் நான் ஜெயித்தவர்கள் என்ன சொன்னாலும் கேட்பேன். அதுபோலத்தான் அருணாசலம் படத்தில், ரஜினி ஒரு மாசத்துல தன்னிடம் இருக்கிற பணத்தை செலவு செய்து விட வேண்டும். இதற்காக பைவ் ஸ்டார் ஹோட்டலில் அவர் அறை எடுத்து தங்கி  பணத்தை தண்ணிபோல செலவு செய்வார். கடைசி நாளில் பணம் மொத்தமும் செலவாகிவிட அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலை விட்டு போவது போல காட்சி வைத்திருந்தேன்.

அப்போது ரஜினி அந்த சீனில் அவராக வெளியில் செல்வது போல வேண்டாம். ஹோட்டல்ல இருந்து அவங்களாவே வெளியே அனுப்புவது போல காட்சி இருந்தா நன்றாக இருக்கும் என்றார்.

உடனே நான் அது அப்படி சார்? நல்லா இருக்காது என்று சொன்னேன். ஆனாலும் நீங்க வைங்க சார் அது ஒர்க் அவுட் ஆகும் என்றார். அவர் சொன்னது படியே நான் அந்த காட்சியை வைத்தேன் அந்த படத்தில் அந்த காட்சிதான் சென்டிமென்ட் காட்சியாக இருந்தது. என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சுந்தர்.சி.

Advertisement

Advertisement