• Dec 26 2024

பிக்பாஸ் சீசன் 7 அர்ச்சனாவுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள் என்ன தெரியுமா?- அடடே இப்படியொரு வாய்ப்பா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

 பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அர்ச்சனா 7வது சீசனின் டைட்டில் வின்னர் என நேற்றைய தினம் நடந்த கிராண்ட் பினாலே நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்பட்டார்.

ஒவ்வொரு சீசனிலும் கடைசி வரை பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கையை உயர்த்துவதற்கு முன்பு கமல்ஹாசன் சில வேடிக்கைகள் காட்டுவார். ஆனால், இந்த சீசனில் கொஞ்சம் ஓவர்டோஸாகவே ஃபைனல் 2 போட்டியாளர்களை பதற வைக்கும் அளவுக்கு அவர்கள் இருவரது கையையும் விட்டு விட்டு நான் போய் கேட்டுட்டு வரேன் என பங்கமாக கலாய்த்து விட்டார்.


கடைசியாக மணி மற்றும் அர்ச்சனா கையை பிடித்துக் கொண்டு தனது நெஞ்சில் எல்லாம் வைத்துக் கொண்டு அவர்கள் இதயத்தை படபடக்க வைத்தார். கடைசியாக அர்ச்சனாவின் கையை உயர்த்தி பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என அறிவித்தார்.

அர்ச்சனாவுக்கு வெற்றிக் கோப்பை மட்டுமல்ல,சில சூப்பர் பரிசுகளும் கிடைத்தன.ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு 15 லட்சம் ரூபாய் நிலத்தை பரிசாக வழங்கி உள்ளனர். இதுவரை மற்ற எந்த சீசனிலும் இப்படியொரு பரிசுகளை விளம்பர நிறுவனங்கள் வழங்கியதில்லை.

மேலும், ஒவ்வொரு முறையும் எவிக்ட் ஆகி போட்டியாளர்கள் வெளியே செல்லும் போது Vitara Carல் தான் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். கடைசியில் அந்த கார் நிறுவனத்தில் இருந்து பிராண்ட் நியூ கார் ஒன்றை பரிசாகவும் அர்ச்சனாவுக்கு வழங்கினர். 50 லட்சம் பரிசுடன் சேர்த்து நிலம் மற்றும் கார் பரிசுகளை அர்ச்சனா அள்ளி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement