• Apr 21 2026

அஜித்தின் ரேசிங் அணி படைத்த வரலாற்று சாதனை என்ன தெரியுமா?

shali / 23 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், நடிப்பைத் தாண்டியும் பல துறைகளில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக பைக் ரேஸ், கார் ரேஸ் போன்ற மோட்டார் ஸ்போர்ட்ஸ்களில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு அனைவரும் அறிந்ததே. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அவரது ரேசிங் அணி சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறது.


இந்நிலையில், 24H Series போட்டி தற்போது பெல்ஜியம் நாட்டில் நடைபெற்றது. இதில் GR3 PRO பிரிவில் அஜித்தின் ரேசிங் அணி இரண்டாம் இடத்தை பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த சாதனை ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, போட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அஜித்தின் இந்த சாதனைக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல், பல பிரபலங்களும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த போட்டி தொடர்பான சில புகைப்படங்கள் தற்போது லீக்காகி வெளியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எந்த துறையிலும் முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் அஜித், மீண்டும் ஒருமுறை தனது திறமையை நிரூபித்துள்ளார்.

Advertisement

Advertisement