• Dec 26 2024

இன்னுமா மாயாவின் அம்மா சாகவில்லை... கமெண்ட் பார்த்து கொந்தளித்த மாயாவின் தங்கை... என்ன சொன்னார் தெரியுமா ?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7  ஆரம்பமாகி 10 வாரங்களை கடந்துவிட்டது. விறுவிறுப்பின் உச்சமாக, ஒவ்வொரு டாஸ்க்கும் மாஸாக இருக்க போட்டியாளர்கள் கடும் போட்டியுடன் விளையாடி வருகிறார்கள்.

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள், இதில் இருந்து யார் வெளியேறுவார் என தெரியவில்லை. இந்த சீசனில் ரசிகர்கள் பலராலும் வெறுக்கப்பட்ட ஒரு நபராக இருக்கிறார் மாயா, காரணம் அந்த அளவிற்கு அவர் பிக்பாஸ் வீட்டில் சில விளையாட்டுகள் விளையாடி வருகிறார்.


இந்நிலையில் அது ஒருபுறம் பிக்பாஸ் மாயாவின் சகோதரி அண்மையில் ஒரு டுவிட் பதிவு போட அதற்கு கீழ் ஒரு ரசிகர் அம்மா எப்படி இருக்கிறார்கள் என கேட்டுள்ளார், அதற்கு அவரும் நலமாக இருக்கிறார் விரைவில் டிவியில் உங்களை சந்திக்கிறோம் என பதில் அளித்தார்.அதற்கு கீழ் இன்னொரு பதிவில், இன்னுமா அந்த அம்மா சாகாமல் இருக்கிறார் என்று கமெண்ட் போட்டு இருக்கிறார்.


இந்த வன்மம் தேவையா? தாயைப் பற்றி நீ பேசும் பொழுது உன்னுடைய தாயைப் பற்றி நினைத்துப் பார்த்தாயா. நிகழ்ச்சியில் கெட்டவர்களாக காட்டப்படுபவர்கள் வெளியே நல்லவர்களாக இருக்கலாம், உள்ளே நல்லவராக இருப்பவர் வெளியே கேடு கெட்டவராக கூட இருக்கலாம்.


பிக்பாஸில் 60 கேமராக்களில் பதிவாகி வரும் காட்சிகள் 20% மட்டுமே உண்மை, இதனால் உங்களுடைய வன்மத்தை போட்டியாளர்களுக்கு போடும் ஓட்டுகளில் காண்பியுங்கள் என்று அழுத்தமாக கூறியிருக்கிறார்.  

Advertisement

Advertisement