• Apr 23 2026

'துரந்தர் 2' தமிழ் வெர்சனுக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு கிடைத்த அதகள அப்டேட்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகிய படங்களில் ஒன்றாக திகழ்கிறது ‘துரந்தர் 2’. ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான இந்த படம் மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இந்த இரண்டாவது பாகம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.


இந்த படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது ஆற்றல்மிக்க நடிப்பும், ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தாலும், படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் கலவையானதாக இருந்தது. இதனால், படம் குறித்து சமூக வலைத்தளங்களில் மற்றும் சினிமா வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

முக்கியமாக, இந்த படம் ஆரம்பத்தில் இந்தியா முழுவதும் இந்தி மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பிராந்திய மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகள் தயாராக இருந்தபோதிலும், அவற்றிற்கு தேவையான சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக உடனடியாக வெளியிட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது. ‘துரந்தர் 2’ படத்தின் தமிழ் டப் செய்யப்பட்ட பதிப்பு, முறையான சென்சார் சான்றிதழைப் பெற்று வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த படத்தை PVR Cinemas நிறுவனம் வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை முதல் ‘துரந்தர் 2’ திரைப்படம் தமிழில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு தமிழ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரன்வீர் சிங் ரசிகர்கள் இந்த படத்தை தங்கள் மொழியில் பார்க்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement