விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கேரக்டரில் நடிக்கும் பழனியப்பன் பிரபல சேனல் ஒன்று பேட்டி வழங்கியுள்ளார். அதில் அவர் கூறிய விடயங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், சிறகடிக்க ஆசை சீரியலுக்கு தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த சீரியல் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவிலேயே ஏழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.
ஆனாலும் தமிழில் நடிக்கும் நடிகர்களை எந்த மொழியிலும் அடித்துக் கொள்ள முடியாது. சாதாரண கார் டிரைவர் ஹீரோவாக, அதாவது பழைய காலத்தில் ரஜினி, எம்ஜிஆர் போன்றவர்களின் ஸ்டைலில் இந்த சீரியல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிலும் ஹீரோ நல்ல கலரா இல்லாமல், ஜிம் பாடியா இல்லாமல், சாதாரண பக்கத்து வீட்டுப் பையன் போல இருப்பார்.
அதே போல இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் காணப்படுகின்றது. அதாவது சிட்டி, மலேசியா மாமா, பாட்டி என அடிக்கடி இந்த சீரியலில் தென்படாத கேரக்டர்களும் இடையில் வரும் போது அவர்களுக்கான எதிர்பார்ப்பு அதிக அளவிலேயே ரசிகர்கள் மத்தியில் காணப்படும்.
நான் திருமதி செல்வம் சீரியல் நடித்த போது அந்த சீரியலின் ஹீரோவுக்கு அப்பாவின் நண்பராக நடித்தேன். ஆனால் தற்போது கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து ஹீரோவுக்கு நண்பராக நடிக்கின்றேன்.
இந்த சீரியல் பிரபலமாக காணப்படுவதற்கு முக்கிய காரணம் நடிகர்கள் இல்லை. இயக்குநர் எடுத்துக் கொண்ட ஸ்கிரிப்ட் தான் என பழனியப்பன் குறித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதே வேளை, இந்த சீரியலில் ரோகிணியின் கேரக்டர் நெகட்டிவ் கேரக்டர் என்றாலும் அதுவே கதைக்களத்தை சுவாரசியமாக கொண்டு செல்ல உதவுகின்றது. தற்போது அவரின் ரகசியங்கள் அம்பலமாகி வரும் நிலையில் அடுத்து க்ரிஷ் பற்றிய உண்மை தெரிய வருமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Listen News!