• Apr 04 2025

OTT தளத்தில் வெளியாகவுள்ள ‘2K லவ்ஸ்டோரி’ எப்போ தெரியுமா..?

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘2K லவ்ஸ்டோரி’ என்ற காதல் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தை Ity Light Pictures தயாரித்துள்ளது.இப் படத்தில் காதல் மற்றும் நட்பு ஆகிய இரண்டையும் அழகாக கையாளும் இளைஞர்களின் கதையை பிரதிபலிக்கும் மற்றும் அவர்கள் வாழும் சமூகத்தின் உணர்வுகளை திரைக்கதையின் மூலம் மக்களுக்கு தெரிவித்துள்ளார்.


இப் படத்தில் புதுமுக நாயகன் ஜெகவீர் நடிக்கின்றார் அவருடன் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜ் நடித்துள்ளார். வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து கொண்டு ரசிகர்களை கவரும் வண்ணம் படத்தின் கதை அமைந்தது.


இப்பொழுது இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2K லவ்ஸ்டோரி படத்தை வரும் 14ம் தேதி ஆஹா தமிழ் OTT தளத்தில் துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காதல், நட்பு, மற்றும் இளமை எங்கும் வாழும் அழகான பரிமாணங்களை காண முடியும். இதற்கிடையில் இப்படத்தின் வெளியீட்டுக்கு ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement