• Dec 26 2024

தனுஷ் - அக்ஷயாவின் ஹனிமூன் எங்கே தெரியுமா? நெப்போலியன் போட்ட பிளான்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தனது மூத்த மகனுடைய திருமணத்தை ஜப்பானில் ஜாம் ஜாம் என செய்து முடித்துள்ளார் நெப்போலியன். தனது மகன் தசைக்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட போதும் அதை ஒரு காரணமாக பொருட்படுத்தாமல் அவர் கூறிய எல்லா கடமைகளையும் சிறப்பாக செய்துள்ளார் நெப்போலியன்.

கடந்த அக்டோபர் ஏழாம் தேதி இவர்களுடைய திருமணம் ஜப்பானின் தலைநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பல சினிமா நட்சத்திரங்களும் ஜப்பானுக்கு விரைந்து இருந்தார்கள்.

தனுஷ் திருமணத்தின் போது அக்ஷயா கழுத்தில் தாலி கட்ட முடியாத நிலையில் தனுஷின் கைகளைப் பிடித்து அவருடைய தாயார் தான் தாலிச் செயினை அக்ஷயா கழுத்தில் போட்டு விட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

d_i_a

இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் முதன்முறையாக தனுஷும்  அக்ஷயாவும் ஜோடியாக வெளியே சென்று உள்ளார்கள். இந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. தசை சிதைவு நோயால் தனுஷ் பாதிக்கப்பட்ட போதும் டெஸ்ட் டியூப் பேபி மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என பிரபல மருத்துவர் ஒருவர் ஆலோசனை வழங்கியிருந்தார்.


இந்த நிலையில், தனுஷும்  அக்ஷயாவும் சிங்கப்பூரில் தமது ஹனிமூனை கொண்டாட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதாவது ஜப்பானில் திருமணத்தை முடித்துவிட்டு நெப்போலியன் தனது குடும்பத்துடன் அமெரிக்கா செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் ஹனிமூன் கொண்டாட சிங்கப்பூருக்கு செல்ல உள்ளதாகவும் நெப்போலியன் சென்னைக்கு வர திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement