• Apr 21 2025

போப் பிரான்சிஸின் மறைவால் துயரத்தில் தவிக்கும் திரைப் பிரபலம்..! யார் தெரியுமா..?

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

உரோமில் இருந்து உலக மக்களின் மனங்களுக்குள் ஆழமாய் இடம் பிடித்திருந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இன்று காலமாகியுள்ளார். அவரது மறைவு உலகம் முழுவதும் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது. போப்பின் வாழ்கைச் செயற்பாடுகள் மற்றும் சமுதாய நலனுக்காக காட்டிய தன்னலமற்ற சேவைகள் குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதற்கிடையே, தமிழ் நடிகரும் த.வெ.க கட்சியின் தலைவருமான விஜய் தனது ஆழ்ந்த இரக்கத்தை தற்பொழுது தெரிவித்துள்ளார். அவர் அளித்திருக்கும் அந்த உருக்கமான கருத்துக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.


நடிகர் விஜய் கூறியதாவது,“போப் பிரான்சிஸின் மறைவு எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அமைதி, மனித நேயம் மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளமாக விளங்கிய அவர் உலகம் முழுவதும் தனது வார்த்தைகளால் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் என்றதுடன் அமைதியை நேசிப்போருக்கு இது ஒரு பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வாழ்த்துகின்றேன்.” எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த உரையாடலில், விஜய் தனது தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளதுடன் போப் பிரான்சிஸ் குறித்து தனக்கு இருந்த உணர்வுகளை மிகுந்த மரியாதையுடன் விவரித்துள்ளார். விஜயின் கருத்துக்களுடன் தமிழ் திரையுலகத்திலும் பல பிரபலங்கள் தங்களது இரக்கத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்:

Advertisement

Advertisement