• Dec 26 2024

கார்த்தியின் 27வது படத்தில் நடிக்க போகும் சீரியல் நடிகை... எந்த சீரியல் நடிகை தெரியுமா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தியை கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து அதில் பெஸ்ட்டை காட்டக் கூடியவர். அதனாலயே தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார். இவருடைய அடுத்த படத்தில் பிரபல சீரியல் நடிகை  ஒருவர் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


ஜப்பான் பட தோல்வியை தொடர்ந்து ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் கார்த்தி நிலைமை இருக்கிறது. இதற்கிடையில் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ஆனந்தராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகியிருக்கிறார்கள்.

அடுத்ததாக கார்த்தியின் 27வது படத்திற்கு ரொமான்ஸ் படத்திற்கு குருநாதராக இருக்கும் இயக்குனருடன் கூட்டணி வைக்கிறார். ரொமான்ஸ் என்று சொல்வதை விட காதல் உணர்வுகளை இவரை தவிர உணர்வுபூர்வமாக யாராலையும் காட்ட முடியாது. அந்த அளவிற்கு தத்ரூபமாக எடுத்த இயக்குனர் பிரேம்குமார் உடன் இணையப் போகிறார். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் அனைவரது பேவரைட் படமாக தற்போது வரை இருக்கிறது.


அந்த வகையில் பிரேம்குமார் உடன் கார்த்திக் நடிக்க போகும் 27 வது படமும் காதலுக்கும் ரொமான்ஸுக்கும் பஞ்சம் இருக்காத வகையில் ஹிட் அடிக்கும். இதில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகி இருக்கிறார். அடுத்ததாக கார்த்தி உடன் ரொமான்ஸ் பண்ணுவதற்காக சீரியல் நடிகையை வளைத்துப் போட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே கன்னட படங்களில் நடிகையாக அறிமுகமானவர்.


தமிழில் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே சீசன் 2வில் பிரியா கேரக்டரில் நடித்து வரும் சுவாதி தான். இவர்தான் கார்த்தியின் 27வது படத்திற்கு காமிட்டாகி இருக்கிறார். சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்துவிட்டு படத்துக்காக மாடல் டிரஸ் உடன் உலா வர ஆரம்பித்து விட்டார். இதற்கான படப்பிடிப்பு தற்போது காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்து தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement