தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ ,வாடிவாசல் ,சூர்யா 45 போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.சமீபத்தில் வெளியாகிய கங்குவா திரைப்படம் பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து படு தோல்வியை சந்தித்தது.இருப்பினும் கொஞ்சம் கூட துவண்டு போகாமல் மீண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
பிள்ளைகளின் படிப்பு மனைவி ஜோதிகாவின் ஆசை போன்ற பல காரணங்களினால் மும்பையில் செட்டில் ஆகிய இவர் பல விமர்சனங்களை சந்திப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்து வந்துள்ளது. எனினும் சூர்யா சென்னை மண்ணுக்காக செய்துள்ள ஒரு செயல் தற்போது வைரலாகியுள்ளது.
அதாவது சூர்யா இப்பொழுது நடைபெற்று வரும் ISPL கிரிக்கெட் போட்டியில் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளதுடன். தனது சென்னை அணிக்காக பலத்த சப்போர்ட் ஒன்றினை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!