• Dec 27 2024

கேப்டன் விஜகாந்த் இறுதியாக பேசிய வீடியோ எது தெரியுமா? கண்ணீருடன் பகிரும் மக்கள்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும் , பிரபல நடிகருமான கேப்டன் விஜயகாந்த் மறைவால் தமிழகமே கண்ணீரில் உள்ளது .

இவ்வாறு நடிகர் விஜயகாந்த் திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ளது. தற்போது அவரது மறைவிற்கு தமிழ் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்களை தாண்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் இறப்பதற்கு முன் பேசிய கடைசி வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகின்றது. அதன்படி அவர் இறுதியாக பேசிய வீடியோவில், 


பெரியோர்களே ,தாய்மார்களே ,அன்பு உள்ளம் கொண்ட சகோதர, சகோதரிமார்களே.. உயிரிலும் மேலான அன்பு தமிழறிஞர்களே.. அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்து கொண்டு எனக்காக பிராத்தனை செய்து கொண்ட என் அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள். 

"லஞ்சம் இல்லாத ஆட்சி யாருக்கும் அஞ்சாத நீதி " நல்லதொரு மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என இறுதியாக அனைத்து மக்களுக்கும் தனது புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

தற்போது அவர் பேசிய வீடியோ மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement