• Dec 26 2024

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா ?

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ஹீரோவாகும் கனவுடன் வந்த ஓர் இளைஞன் கால சூழ்நிலைகளை பொறுத்து இயக்குனராக அறிமுகமாகிறான்.அறிமுக இயக்குனரின் படம் என சொல்ல முடியாத அளவுக்கு அமைந்திருந்தது படத்தின் வெற்றியும் வசூலும்.அவ் அறிமுக இயக்குனர் தான் எஸ்.ஜே.சூர்யா அவரின் முதல் படம் அஜித் நடிப்பில் வெளிவந்த "வாலி" திரைப்படம்.

SJ Suryah's first look from Raayan released; Dhanush says he had fun  directing - Hindustan Times

வெற்றி இயக்குராக மாறிய எஸ்.ஜே.சூர்யா தனது இயக்கதில் தானே ஹீரோவாகவும் நடித்து தன் கனவை நிறைவேற்றிக்கொண்டார்.தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்த எஸ்.ஜே.சூர்யா யாரும் எதிர்பாரா வகையில் வில்லன் பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.வில்லனுக்கு இலக்கணம் என்றே சொல்லுமளவு நடிப்பை வெளிப்படுத்திய எஸ்.ஜே.சூர்யாவிற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.


தற்போது ஹீரோ வில்லன் என்பதெல்லாம் தாண்டி ஒரு சிறந்த நடிகனாக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யாவை முன்னணி நடிகராக கொண்டு அடுத்த படத்தினை இயக்கவுள்ளார் 'இந்தியன் 2' இன் வசன எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். "பன்றிவேட்டை" என பெயரிடப்பட்டிருக்கும் இப் படத்திற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement