விடுதலை 2 படத்தின் வெற்றியின் பின்னர் இயக்குநர் வெற்றிமாறன் சூர்யாவுடன் இணைந்து "வாடிவாசல்" எனும் படத்தை இயக்குவதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றார்.ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இவரது இயக்கத்தில் உருவாகும் படங்கள் அனைத்தும் மிகவும் பெரிய வசூலை பெற்று கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் தற்போது இவர் மலையாளத்தில் வெளியாகவுள்ள "ஆலப்புழா ஜிம்கானா "படத்தினை தமிழில் ரீமேக் செய்வதற்கான பேச்சு வார்த்தைகளில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுவருவதாக சினிமா வட்டாரங்களில் இருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இப் படத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் இப் படத்தில் நடிப்பதற்கு ஒத்து கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அசுரன் படத்தின் பின்னர் கருணாஸின் மகன் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகின்றார்.
Listen News!