• Oct 26 2024

குக் வித் கோமாளி சீசன் 5ன் இறுதி Finalist யாரு யாரு தெரியுமா? வெளியான தகவல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சமையல் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசன் வரை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஆரம்பத்தில் வெங்கடேஷ் பட் வெளியேறி இருந்தார். அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப்பு குக்கு டுப்பு குக்கு என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.

இதன் காரணத்தினால் வெங்கடேஷ் பட்டுவின் ரசிகர்கள்  அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். சிலர் வெங்கடேஷ் பட்  இல்லாத நிகழ்ச்சியை பார்க்கவே மாட்டோம் என கமெண்ட் பண்ணி கூட வந்தார்கள் . அதன் பின்பு இந்த சீசன் ஆரம்பிக்குமா? இல்லையா? என்ற கேள்வி காணப்பட்டது.

இதை தொடர்ந்து புதிய நடுவர்கள், புதிய போட்டியாளர்கள், கோமாளிகள் என ஐந்தாவது சீசன் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 


எனினும் நேற்றைய தினம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மணிமேகலை திடீரென குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியிருந்தார். இதுவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5 இருந்து இறுதி finalist ஆக மூன்று பேர் தெரிவாகி உள்ளார்கள்.

அதன்படி இந்த நிகழ்ச்சியில் இறுதியாக பிரியங்கா, இர்பான் மற்றும் சுஜிதா ஆகியோர் இறுதி finalist ஆக தேர்வாகி உள்ளார்கள். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.


Advertisement