• Jan 16 2025

விஜய் இயக்கும் லவ் ஸ்டோரியில் ஹீரோ யாரு தெரியுமா? அதிரடியாக வெளியான தகவல்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் ஏ.எல் விஜய். இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து வரிசையாக படங்களை கொடுத்தார். சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற படத்தின் மூலம் உருவாக்கியிருந்தார்.

இதை தொடர்ந்து மீண்டும் கங்கனாவை வைத்து ஒரு படத்தை இயக்கினார். அந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் நடந்த நிலையில் கங்கனா தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனதால் அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும் நடிகை அனுஷ்காவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்புக்கள் வெளியானது. ஆனால் அதற்கு பிறகு அதைப் பற்றி வேறு எந்த தகவலும் வரவில்லை.


இந்த நிலையில், இயக்குநர் ஏ. எல் விஜய் ஹரிஷ் கல்யாணை  கதாநாயக வைத்து ஒரு காதல் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்திற்கு ஹாரிஸ்  ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தற்போது ஹாரிஸ் கல்யாண் நடிக்கும் படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றன. சமீபத்தில் இவர் ஒரு நடிப்பில் வெளியான லப்பர் பந்து, பார்க்கிங் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement