• Dec 25 2024

சூர்யா 45 திரைப்படத்தில் இணையும் "ரப்பர் பந்து" நடிகை... யார் தெரியுமா?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 43வது படமான கங்குவா படத்தில் நடித்திருந்தார் நடிகர் சூர்யா. அந்த திரைப்படம் வெளியாகி வசூலில் சரிவை சந்தித்து வருகிறது. 2000 கோடி தாண்டும் என நம்பிக்கை இருந்த நிலையில் கடுமையான விமர்சனங்களினால் இவ்வாறு சரிவை எதிர்நோக்கியுள்ளது. 


தற்போது அடுத்தப்படியாக சூர்யா44 திரைப்படத்தினை இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கிவருகிறார். அதற்க்கு அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கின்றார்.


இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். நேற்று பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் சூர்யா 45வது படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவங்கியது இந்த நிலையில் இதன் படப்பிடிப்பில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரப்பர பந்து படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகை சுவாசிகா இணைந்து நடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement